Nov 26, 2026 - 09:53 AM

சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்பட கூடிய ராகு மற்றும் கேது, ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக கூடியவர். மேலும் இவை அசுப கிரகங்கள் என்பதால் இவற்றினுடைய தாக்கம் மோசமானதாக இருக்கும். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் திகதி பெயர்ச்சி நடக்க உள்ளது. இதில் எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
ராகு கேது பெயர்ச்சி 2026 ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. நிழல் கிரகங்களான இவை மாயையை உண்டாக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது. 2026 டிசம்பர் 5 ஆம் திகதி நடக்கும் பெயர்ச்சி மூலம் ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர்.
ஆகிய ராசிகளுக்கு சாதகமற்ற நிலையில் அமைந்துள்ளனர்.இவர்கள் பெறக்கூடிய பலன்களை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு ராகு பத்தாமிடத்தில், கேது 4 ஆம் வீடான சுப ஸ்தானத்திலும் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்ய உள்ளனர். இந்த அமைப்பு உங்களுடைய வாழ்க்கையில் வேலை, தொழில் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும் என்றாலும், நீங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படும். உத்வேகத்துடன் உழைக்க வேண்டிய காலம். புதிய நபர்களுடன் தொடர்பில் கவனம் தேவை.
மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களுக்கு ராகு மற்றும் கேதுவின் அமைப்பானது சிக்கல்களை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் கேது, அஷ்டம ஸ்தானத்தில் ராகு இருப்பதால் ஆரோக்கியம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் கூடுதல் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். குறிப்பாக கொடுக்கல் வாங்கல் விஷயங்களை ஆவணப்படுத்தவும். யாரையும் முழுவதும் நாங்கள் நம்பாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் நிதி சார்ந்த இழப்பை சந்திப்பின் நேரிடும். செலவுகளை கட்டுப்படுத்துவதும், சரியான இடத்தில் முதலீடு செய்ய முயற்சி செய்யவும்.
கடகம் ராசி
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த ராகு - கேது பெயர்ச்சியானது பல விதத்தில் உங்களுக்கு சவாலாக அமைய வாய்ப்பு உண்டு. கூட்டணி வைத்து செய்யக்கூடிய வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. சரியான நிதி விபரங்களை கடைபிடிக்காவிட்டால் நஷ்டம் சந்திக்க நேரிடும். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் என்பதால் உங்களுடைய உணர்ச்சி வசப்படுவதையும், கோபத்தையும் கட்டுப்படுத்தவும். எல்லா விஷயத்திற்கும் எதிர்வினை ஆக்குவதை தவிர்ப்பது நல்லது. உறவுகளில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்திலும் ஒரு ஆரோக்கியத்தை கவனம் தேவை.
முடிவெடுக்கும் விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். மேலும் உணர்வுபூர்வமாக எடுப்பதை விட யோசித்து நிதானமாக முடிவு எடுக்கவும். இந்த காலத்திலும் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வேலை, தொழிலில் தைரியத்துடன் செயல்படவும்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களுக்கு, ராகு-கேதுவின் இந்த இடமாற்றம் சில விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும். வேலை தொடர்காக பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். இது உங்களுக்கு பணி சுமையாக, மனரீதியாக தொந்தரவுகளை தரக்கூடியதாக இருக்கும். நிதி விஷயங்களில் அபாயகரமான முடிவுகள் எடுப்பதை தெரிவிக்கவும். திடீர் செலவுகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து, குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து நிதானமாக செயல்படவும். ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கவும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த காலத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. பண விவகாரங்களில் புத்திசாலித்தனமாக செயல்படவும். உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் ராகு இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், பணம் விவகாரங்களில் கவனம் தேவை. கடன் வாங்குவதை தவிர்க்கவும். உங்களுடைய பேச்சின் தாக்கம் காரணமாக உங்களுடைய காதல் அல்லது திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். அதனால் உங்களுடைய வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். அவசர முடிவுகள் எடுப்பதும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மகர ராசி
மகர ராசி அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காரணமாக, ராகு உங்கள் ராசியில் நுழைவதும், கேது 7ல் இருப்பதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். மன குழப்பமும், சரியான முடிவு எடுக்க முடியாத சூழல் ஏற்படலாம். உங்களுடைய தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள், நிம்மதியற்ற சூழல் ஏற்படலாம். இந்த காலத்தில் உங்களுடைய ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் தேவை. நீங்கள் செய்யும் தொழில், வேலை தொடருமாக அவசர முடிவுகள் எடுப்பது, புதிய திட்டங்களை செயல்படுவதை தவிர்க்கவும். பணியிட அரசியலில் இருந்து விலகி இருக்கவும். மேலும் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது நன்மை தரும். உங்கள் வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து செல்வது குடும்பத்தில் நிம்மதியை தரக்கூடியதாக இருக்கும்.

































