Nov 26, 2026 - 11:40 AM

ருவன்வெலி மகாசாய வளாகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பதினொரு பேர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய அருகே நீதிமன்ற உத்தரவை மீறி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரையும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
கடந்த நவம்பர் 12ஆம் திகதி கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

































