Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் விநியோகம்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

    Mobitel Inner 1278

    ஹாலிவுட் திரைப்படத் தொடரான ​​'அவெஞ்சர்ஸ் - டூம்ஸ்டே' அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.


    அதிக எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டிரெய்லர் தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியானது.


    கடந்த நவம்பர் 23 ஆம் திகதி வெளியான இப்படத்தின் இறுதி டிரெய்லர், முதல் 24 மணி நேரத்திலேயே 563 மில்லியன் (56.3 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.


    மார்வெல் நிறுவனத்தை உள்ளடக்கிய டிஸ்னி நிறுவனம் வரலாற்றிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற சாதனையை 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படைத்துள்ளது.


    மேலும், உலக அளவில் அதிக பார்வைகளைப் பெற்ற திரைப்பட டிரெய்லர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.


    இதற்கு முன்பு வெளியான 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 503 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. தற்போது இறுதி டிரெய்லர் அந்த சாதனையையும் முறியடித்துள்ளது.


    அதேபோல், 'டெட்பூல் அண்ட் வால்வரின்' படத்தின் சூப்பர் பவுல் டீசர் பெற்ற 365 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.


    2019 இல் வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' படத்திற்குப் பிறகு, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருந்து வெளிவரும் அவெஞ்சர்ஸ் தொடர் படம் இதுவாகும்.


    இப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். மார்வெல் சூப்பர் ஹீரோ கதைகளில் மிகவும் பிரபலமான நடிகரான ராபர்ட் டவுனி ஜூனியர், இம்முறை 'டாக்டர் டூம்' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் காணப்படுகிறார்.


    மேலும் கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டாம் ஹிடில்ஸ்டன், ப்ளோரன்ஸ் பியூ, செபாஸ்டியன் ஸ்டான், அந்தோனி மேக்கி, பெட்ரோ பாஸ்கல் மற்றும் பால் ரட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இந்திய பாக்ஸ் ஆபிஸில் வெளியாவதற்கு முன்பே இப்படம் சாதனை படைத்து வருகிறது. நவம்பர் 17 ஆம் திகதி இந்தியாவிலும் 18 ஆம் திகதி பிற நாடுகளிலும் படம் வெளியாகிறது.


    டிக்கெட் விற்பனை இந்தியாவில் மட்டுமே 50 கோடி ரூபா என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.


    'ராமாயணா' மற்றும் 'துரந்தர் 2' போன்ற சமீபத்திய படங்கள், வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பே 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்தன.


    'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம், வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கும் மேலாக இருக்கும்போதே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.