Nov 26, 2026 - 01:25 PM

வெளியான 21 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 1,755.60 கோடி ரூபா வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படத்தின் உலகளாவிய வசூலான 1,742 கோடி ரூபாயை முறியடித்துள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் 'ராமாயணா'. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம், உலகளாவிய வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான 21 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 1,755.60 கோடி ரூபா வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படத்தின் உலகளாவிய வசூலான 1,742 கோடி ரூபாயை முறியடித்துள்ளது. இதனால், அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 'ராமாயணா' 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை இந்தியாவில் இப்படம் 1,173.60 கோடி ரூபா வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 582 கோடி ரூபா வசூல் கிடைத்துள்ளது. இதன் மூலம் மொத்த உலகளாவிய வசூல் 1,755.60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் தற்போது முதலிடத்தில் 'தங்கல்' (ரூ.2,070 கோடி), 2 ஆவது இடத்தில் 'துரந்தர் 2' (ரூ.1,813.40 கோடி), 3 ஆவது இடத்தில் 'பாகுபலி 2' (ரூ.1,788 கோடி) ஆகிய படங்கள் உள்ளன. இவற்றுக்கு அடுத்த இடத்தை 'ராமாயணா' பிடித்துள்ளது.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் பாகம் 2028 ஆம் ஆண்டு தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் - ராவணன் இடையிலான போரை மையமாகக் கொண்டு இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

































