Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் விநியோகம்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

    Mobitel Inner 1278

    தமிழ் திரைப்படம் 'மகாராஜா' சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டாம் ஹேங்க்ஸ், சச்சனா நமிதாஸின் நடிப்பை பாராட்டி, 'அந்த நபரின் கதாபாத்திரத்தை நானாக இருந்தால் கொன்றிருப்பேன்' என உணர்ச்சிவசப்பட்டார். ஹாலிவுட் ரீமேக் திட்டமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் `மகாராஜா'. இந்திய ரசிகர்களிடம் மட்டுமின்றி சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தைப் பார்த்து ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் வியந்து பாராட்டியுள்ளார்.


    சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருடன் உரையாடிய International Academy of Television Arts & Sciences நிர்வாகக் குழு உறுப்பினர் கவிதா குப்தா, டாம் ஹேங்க்ஸ் மகாராஜா திரைப்படம் குறித்துப் பேசிய சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.


    இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற LACMA கலை நிகழ்ச்சி ஒன்றில் கவிதா குப்தாவைச் சந்தித்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ், இந்தியாவில் இருந்து பார்க்க வேண்டிய மூன்று திரைப்படங்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் பரிந்துரைத்த திரைப்படங்களில் விஜய் சேதுபதியின் மகாராஜாவும் ஒன்று.


    இதையடுத்து, சில வாரங்கள் கழித்து நவம்பர் 7 ஆம் திகதி நடைபெற்ற மற்றொரு LACMA நிகழ்ச்சியில் டாம் ஹேங்க்ஸை மீண்டும் சந்தித்தபோது, அவர் தானாகவே மகாராஜா திரைப்படம் குறித்துப் பேசியுள்ளார்.


    மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சச்சனா நமிதாஸின் நடிப்பு டாம் ஹேங்க்ஸை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


    இதுகுறித்து கவிதா குப்தா பகிர்ந்துகொண்டபோது, டாம் ஹாங்க்ஸ், "என்னால் அந்தப் பெண்ணைப் பற்றிய நினைப்பிலிருந்து இன்னும் வெளிவர முடியவில்லை. என்னவொரு அற்புதமான நடிகை! அந்தக் கதையில் வரும் அந்த நபரை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது, நானாக இருந்திருந்தால் அவரைக் கொன்றிருப்பேன்.


    என்னால் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கமுடியும் என நம்பவில்லை" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, சச்சனா நமிதாஸின் நடிப்பை ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான டாம் ஹாங்க்ஸ் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


    இதற்கிடையே மகாராஜா திரைப்படம் ஹாலிவுட்டில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்பட உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.


    சீனாவில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஹாலிவுட் நிறுவனம் ரீமேக் உரிமையைக் கோரி அணுகியதாக அவர் கூறியிருந்தார். மேலும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கானகே நடிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகின. ஆனால், அவரது நடிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருபுறம் ஹாலிவுட் ரீமேக், மறுபுறம் டாம் ஹேங்க்ஸின் பாராட்டு என சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்.