Nov 26, 2026 - 03:09 PM

குளியாப்பிட்டியில் உள்ள Ceetee என அறியப்படும் தென்னை முக்கோண பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து, தனது விவசாய வழங்கல் சங்கிலி நிதியுதவித் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம், பால் உற்பத்தியாளர்கள் நிதியுதவியைப் பெறுவதை வலுவான வாழ்வாதாரமாக மாற்ற SDB வங்கி பிஎல்சி உதவுகிறது. அதன் ஆரம்பகட்ட வெற்றியைத் தொடர்ந்து, இத்திட்டம் ஒரு புதிய உற்பத்திக் குழுவினர் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் ஆதரவளிக்கும்.
இந்த முயற்சி, Ceetee சங்கத்திற்குப் பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தவணைக் கடன் வசதிகளை வழங்குகிறது. இது வணிக வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய நிதிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்கிறது. இந்த நிதியுதவி, விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கவும், உபகரணங்களில் முதலீடு செய்யவும், தங்கள் பால் பண்ணைகளை மேம்படுத்தவும் உதவும். இதன் மூலம் அவர்கள் உற்பத்தித்திறனை அதிகரித்து, மேலும் நிலையான வணிகங்களை உருவாக்க முடியும். சிறந்த பால் பண்ணை முகாமைத்துவ நடைமுறைகளை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இத்திட்டம் மற்றும் அதன் நிதியுதவி வாய்ப்புகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபடுவதை ஆதரிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 80 பால் உற்பத்தியாளர்களுக்காக நவம்பர் 6ம் திகதி குளியாப்பிட்டியில் பால் உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு அமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
SDB வங்கி பிஎல்சியின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் அக்மீமன கூறுகையில்: “பால் உற்பத்தியாளர்களுக்கு, அவர்களின் தொழில்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் வருமானம் ஈட்டுகின்றன என்பதை அங்கீகரிக்கும் வகையிலான நிதியுதவி தேவைப்படுகிறது. ஸ்தாபிக்கப்பட்ட கூட்டுறவு வலையமைப்புகள் மூலம் செயல்படுவதனூடாக, நிதி உதவியை நம்பகமான சந்தை அணுகல் மற்றும் பால் வருமானத்துடன் இணைந்த வழிமுறையுடன் கடனை அடைக்கும் கட்டமைப்புகளுடன் இணைக்க முடியும். இந்தத் திட்டம், கிராமப்புற தொழில்முனைவோர் முதலீடு செய்யவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் உதவுவதில் எங்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.”
1981ல் பதிவுசெய்யப்பட்ட Ceetee, 17 பால் சேகரிப்பு சங்கங்கள் மூலம் சுமார் 350 உறுப்பினர்களையும் பால் வழங்குனர்களையும் இணைக்கிறது, மேலும் தினமும் அண்ணளவாக 2,500 லீட்டர் பாலைச் சேகரிக்கிறது. இந்த ஸ்தாபிக்கப்பட்ட வலையமைப்பு, விவசாயிகளின் பணப்புழக்கத்துடன் இணைக்கப்பட்ட கடனுதவிக்கு ஒரு அத்திவாரத்தை வழங்குகிறது. மேலும், கடனை அடைக்கும் தொகையானது பால் வருமானத்திலிருந்து கழிக்கப்படுகிறது.
Ceetee சங்கத்தைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் உறுப்பினர் ஈடுபாட்டை வலுப்படுத்துவதையும், பால் சேகரிப்பை அதிகரிப்பதையும், செயல்பாட்டு நிலைத்தன்மையை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. SDB வங்கியைப் பொறுத்தவரை, இது விவசாயக் கடன் மற்றும் வைப்புத் திரட்டலை ஆதரித்த ஒரு முயற்சியின் தொடர்ச்சியாகும், இது நிலையான நிதி மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
SDB வங்கி குறித்த விபரங்கள்
எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் SDB வங்கி, ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கும் ஏற்ப, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட, உரிமம் பெற்ற ஒரு விசேட வங்கியாகும். கொழும்பு பங்குச் சந்தையின் முதன்மைச் சபையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த வங்கி, Fitch Ratings நிறுவனத்திடமிருந்து BB+(lka) கடன் தர மதிப்பீட்டையும், Lanka Rating Agency நிறுவனத்திடமிருந்து BBB- [SL] (Stable) கடன் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள 93 கிளைகள் வாயிலாக, தனிநபர் வாடிக்கையாளர்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பல்வேறு நிதிச் சேவைகளை இந்த வங்கி வழங்குகிறது. சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் தொடர்பான கொள்கைகள் SDB வங்கியின் செயல்பாட்டுக் கோட்பாடுகளில் ஆழமாகப் பதிந்துள்ளன. நிலையான நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்களையும் வணிகங்களையும் மேம்படுத்துவதில் வங்கி உறுதியான கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, பெண்களுக்கு வலுவூட்டுதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் வங்கி தீவிர ஈடுபாடு கொண்டு, இலங்கையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உழைத்து வருகிறது.

































