Nov 26, 2026 - 03:12 PM

விரிவான சர்வதேச உணவு வகைகளுடன், உலகெங்கிலுமிருந்து சேர்க்கைப் பொருட்கள், சுவை வடிவங்கள், மற்றும் வர்த்தகநாமங்களை சங்கமிக்கச் செய்து, இலங்கையில் அனைத்து இல்லங்களும் அவற்றை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் வகையில், மளிகைப்பொருட்களை வாங்கச் செல்லும் சந்தர்ப்பத்தை உலக அனுபவத்தை ஆராயும் வாய்ப்பாக கீல்ஸ் மாற்றியுள்ளது. வாசனைத் திரவியங்கள், கறிக் கூட்டுகள், பாஸ்தா, சோஸ் வகை மற்றும் சமையலுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் என வழக்கத்திற்கு மாறாக புதிய உணவு வடிவங்களை ஆராய்ந்து, தமது இல்லங்களில் புதிய உணவுகளை அறிமுகப்படுத்துவதற்கு கொள்வனவாளர்கள் அழைக்கப்படுகின்றனர்.
இந்திய உணவு வகைகளில் நாட்டம் உள்ளவர்களுக்கு வட மற்றும் தென்னிந்திய உணவு சுவை வடிவங்களை கீல்ஸ் வழங்குகின்றது. பட்டர் சிக்கன், பன்னீர் டிக்கா மசாலா மற்றும் பிரியாணி போன்ற சுவை வடிவங்களுக்குத் தேவையான சுவையூட்டிகளை சுஹானா (Suhana) வழங்கும் அதேசமயம், தென்னிந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் விசேட பப்பட வகைகளை ஷக்தி (Shakti) வழங்குகின்றது.
ரெட், கிறீன், மஸ்ஸமான் மற்றும் பினாங் கறி தயாரிப்புக்கள், சோஸ் வகை மற்றும் சுவையூட்டிகள் உள்ளிட்ட தாய்லாந்து சமையல் முறைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கனக்வான் (Kanakwan) கொண்டு வருகின்றது. Flying Goose தனது சிராச்சா (Sriracha) தயாரிப்பு வரிசையைக் கொண்டு வருவதுடன், ரைஸ் பேப்பர், காரச் சம்பல் கலவை (sambal oelek) மற்றும் நூடில்ஸ் ஆகியவற்றை Thai Choice அறிமுகப்படுத்துகின்றது. இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து அன்றாட உணவுகளில் தாய்லாந்து சுவை வடிவங்களை இலகுவாகக் கொண்டிருப்பதற்கு உதவுகின்றன.
சர்வதேச உணவுத் தெரிவுகளின் மையமாக இத்தாலிய சுவை வடிவங்கள் அமைந்துள்ளன. கீல்ஸ் விற்பனை மையங்களில் மாத்திரம் பிரத்தியேகமாகக் கிடைக்கப்பெறுகின்ற De Cecco, பாஸ்தா, சோஸ் மற்றும் குளுட்டன் ஃப்ரீ (gluten-free) ஆகியவற்றின் பரந்த தெரிவுகளை வழங்குகின்றது. நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்ற Basso ஒலிவ் எண்ணெய் வகை இத்தாலிய உணவு வகைகளின் சுவையை மற்றுமொரு படி மெருகேற்றுவதுடன், Campo D'Oro சோஸ், பெஸ்டோ மற்றும் ஒலிவ் வகை கிடைக்கும் தெரிவுகளை மேலும் விரிவுபடுத்துகின்றது.
உலகில் இத்தாலிய உணவு வகை வாரம் 2026 நிகழ்விற்காக இத்தாலிய வர்த்தக முகவர் அமைப்பு மற்றும் கொழும்பிலுள்ள இத்தாலிய தூதரகம் ஆகியவற்றுடன் கீல்ஸ் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பின் மூலமாக, இத்தாலிய உணவு அனுபவம் மேலும் உயிரூட்டம் பெறுகின்றது. நவம்பர் 13 முதல் 19 வரை இடம்பெற்ற இம்முயற்சி, தெரிவு செய்யப்பட்ட 11 கீல்ஸ் சுப்பர்மார்க்கெட் விற்பனை மையங்கள் மத்தியில் பிரத்தியேக இத்தாலிய உணவுக்கூடங்கள் மற்றும் சுவை பார்க்கும் நிகழ்வுகளைக் கொண்டிருந்ததுடன், இலங்கை எங்கிலும் கொள்வனவாளர்களுக்கு நேரடியாக இத்தாலிய சுவை வடிவங்களை ஆராய்ந்து, சுவைப்பதற்கான வாய்ப்பினை வழங்கியிருந்தது.
இந்த தயாரிப்புக்கள் அனைத்தும் விற்பனை மையங்களில் வெறுமனே காட்சிப்படுத்தலுக்காக கொண்டு வரப்பட்டவை அல்லது. மாறாக, அனைவரையும் ஈர்த்து, உணவு வகைகளில் உள்ளடக்கப்படும் சேர்க்கைப் பொருட்களாக மாறச் செய்வதே இம்முயற்சியின் அடிப்படை நோக்கம். தாய்லாந்து கறிக்கூட்டு மாலைப்பொழுதொன்றை தனித்துவமான கணங்களாக மாற்றும் ஆற்றல் படைத்தது. பாஸ்தா பாக்கெட் ஆனது குடும்பத்திற்கான இரவு உணவாக மாறும் ஆற்றல் படைத்தது. மசாலாப் பொருட்களின் கலவையானது உணவுத் தயாரிப்பில் முன்னெப்போதும் அனுபவித்திராத கைவண்ணத்தைப் படைக்கும் ஆற்றல் மிக்கது.
குடும்பங்களைப் பொறுத்தவரை தமது பிள்ளைகளுக்கு பல்வகைப்பட்ட சுவை வடிவங்களை அறிமுகப்படுத்துவதற்கு இது அரிய வாய்ப்பாக மாறியுள்ளது. தொழில் புரிகின்றவர்களைப் பொறுத்தவரை, வார நாட்களில் சமையலை மேலும் ஆர்வமூட்டுவதாக மாற்றுவதற்கான ஒரு வழியாக இது காணப்படுகின்றது. அனுபவம் வாய்ந்த இல்லத்தரசிகள் மற்றும் வீடுகளில் சமையலில் ஈடுபடுபவர்களுக்கு ஆராய்ந்து, உணவு வகைகளை கலந்து, புதியவற்றைக் கண்டறிவதற்கான அழைப்பாக இது மாறியுள்ளது.
வெவ்வேறுபட்ட நாடுகளின் தயாரிப்புக்களை இலங்கையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்வாக இதனை வெறுமனே மட்டுப்படுத்தி விட முடியாது. இது உலகினை எமது இல்லங்களுக்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாகும். புதிய கலாச்சாரங்களை ஆராய்ந்து, அனுபவிப்பதற்கு எப்போதும் நேரடியாக அந்நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. புதிய சுவை வடிவமொன்றை, புதிய உணவு தயாரிப்பு முறையொன்றை முயற்சிப்பதோ அல்லது வித்தியாசமான ஒன்றை முயற்சி செய்யும் ஆர்வமோ அத்தகைய அனுபவங்களை அனைத்து வீடுகளுக்கும் இலகுவாகக் கிடைக்கச் செய்கின்றது. அத்தகைய சிறிய ஆர்வங்களும், கண்டுபிடிப்புக்களையும் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறச் செய்து, கீல்ஸ் உடன் வாழ்க்கையே fresh ஆக அமைய வேண்டும் என்பதே அந்நிறுவனத்தின் ஆவலாக உள்ளது.

































