Nov 26, 2026 - 03:22 PM

தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப விருதுகள் (NBQSA) 2026 விழாவில், SLT-MOBITEL தனது புதுமையான எட்டு தொழில்நுட்பத் தீர்வுகளுக்காகத் தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் ஆற்றல்களை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியமைக்காக இத்தீர்வுகளுக்கு இந்த கௌரவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப நிபுணத்துவத்தை நடைமுறைக்கேற்ற தீர்வுகளாக மாற்றி, நிஜ உலகச் சவால்களுக்குத் தீர்வுகாண்பதுடன், சேவை வழங்கலை மேம்படுத்தி, வணிக நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கு மதிப்பை உருவாக்குவதில் அந்நிறுவனத்திற்கு உள்ள அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் தெளிவுபடுத்துகிறது.
சைபர் பாதுகாப்பு, தொடர்பாடல்கள், சுகாதாரப் பராமரிப்பு, நிபுணத்துவ சேவைகள் மற்றும் டிஜிட்டல் அப்ளிகேஷன்கள் போன்றவற்றில் பரந்துள்ள இந்தத் தீர்வுகள் பெற்றுக் கொண்ட இந்த கௌரவிப்பினூடாக, SLT-MOBITEL இன் புத்தாக்கப் பிரிவுகளின் பரந்த தன்மை மற்றும் மேம்பட்டு வரும் தொழிற்துறை தேவைகளுக்கு பொருத்தமான வகையில் கவனம் செலுத்துவதில் பங்களிப்புச் செய்வதாகவும் அமைந்துள்ளது.
விருது பெற்ற தீர்வுகளுள், SASE 361 தயாரிப்பு, வணிகச் சேவைகளுக்கான பாதுகாப்புத் தீர்வுகளுக்கான பிரிவில் தங்க விருதையும், VoiceX தீர்வு, தொழிற்துறைசார் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வலையமைப்புகள் மற்றும் தொடர்பாடல்களுக்கான பிரிவில் தங்க விருதையும் வென்றுள்ளன. இவ்விரு தீர்வுகளும், அதிநவீன பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களை வழங்கி, மேன்மேலும் இணையவழியிலும் டிஜிட்டல் முறையிலும் இயங்கும் வணிகச் சூழல்களுக்கு ஆதரவளிப்பதில் SLT-MOBITEL பெற்றுள்ள ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
உள்ளகத் தயாரிப்புகள் (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்) பிரிவின் கீழ், டிஜிட்டல் வரிசை நிர்வாக அமைப்பு வெள்ளி விருதைப் பெற்றுள்ளது. இது, வழிமுறைகளை முறைமைப்படுத்துவதிலும் மற்றும் சேவை அனுபவங்களை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும், உள்ளடக்கல் மற்றும் சமூகச் சேவைகள் பிரிவின் கீழ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் தலைப்பில் Suwatha செயலியும்; வணிகச் சேவைகள் பிரிவின் கீழ் தொழில்முறைச் சேவைத் தீர்வுகளுக்காக சட்ட டிஜிட்டல் நிர்வாகத் தளமும்; உள்முகத் தயாரிப்புகள் (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்) பிரிவின் கீழ் SecureGate VMS மற்றும் Blitz.ai ஆகிய தீர்வுகளும்; வணிகச் சேவைகள் பிரிவின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவைத் தீர்வுகளுக்காக Akaza ChatX ஆகிய தயாரிப்புகளும் மேலதிக அங்கீகார விருதுகளைப் பெற்றுள்ளன.
இச்சாதனையை மேலும் வலுப்படுத்தும் வகையில், VoiceX மற்றும் Suwatha ஆகிய தீர்வுகள், டிசம்பர் 2026-இல் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ஆசிய பசிபிக் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கூட்டிணைவு (APICTA) விருதுகள் 2026 நிகழ்வுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இப்பரிந்துரைகள், SLT-MOBITEL நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளை விரிவான பிராந்திய அளவிலான தளமொன்றில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.
தொழில்நுட்பத்திற்கு அப்பால் சென்று, அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் வணிகச் செயற்பாடுகளிலும் எவ்வாறு தொட்டுணரக்கூடிய நன்மைகளை புதுமைப்படைப்புகள் வழங்க முடியும் என்பதற்கு இத்தயாரிப்புகள் அனைத்தும் சான்றாக அமைகின்றன. டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் மிகவும் திறமையான தொடர்பாடல்களை இயலச்செய்தல் முதல், சுகாதாரத் துறைக்கு ஆதரவளித்தல் மற்றும் தொழில்முறைச் சேவைகளை உருமாற்றுதல் வரை, தொழில்நுட்பத்தை மேலும் அணுகக்கூடியதாகவும், திறனுள்ளதாகவும், செல்வாக்குமிக்கதாகவும் மாற்றுவதற்கான புதிய வழிகளை SLT-MOBITEL தொடர்ந்து கண்டறிந்து வருகின்றது.
இலங்கை தொடர்ந்து டிஜிட்டல் உருமாற்றத்தைத் தழுவி வரும் நிலையில், வணிகங்களை வலுப்படுத்தக்கூடியதும், சமூகங்களை வளம்படுத்தக்கூடியதும், மற்றும் அதிக இணைப்புகளைக் கொண்டதொரு தேசத்திற்குப் பங்களிக்கக்கூடியதுமான பாதுகாப்பான, அறிவார்ந்த மற்றும் சக்திவாய்ந்த டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்கத் தனது தொழில்நுட்ப ஆற்றல்களைப் பயன்படுத்துவதில் SLT-MOBITEL உறுதியுடன் உள்ளது.

































