Nov 26, 2026 - 03:25 PM

இலங்கையில் அப்பியாச புத்தகங்களுக்கு புதிய தரநிலையை நிலைநாட்டும் வகையில், அட்லஸ் அக்சிலியா (Atlas Axillia) நிறுவனம் தனது “Gold Standard” (தங்கத் தரநிலை) அப்பியாச புத்தக வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்தரமான தயாரிப்புத் தரத்துடன், செயற்பாடு அடிப்படையிலான மற்றும் ஊடாடும் கற்றல் அனுபவங்களையும் ஒருங்கிணைத்து இந்தப் புதிய புத்தகத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2026 நவம்பர் 21ஆம் திகதி கொழும்பு, அலரி மாளிகையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இப்புதிய வரிசை, வழக்கமான அப்பியாச புத்தகங்களின் பயன்பாட்டை மறுவரையறை செய்யும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அட்லஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் உள்ளிட்ட 500 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் கல்வித்துறையில் 67 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையை வென்றுள்ள அட்லஸ் நிறுவனம், இந்த மாற்றத்தின் ஊடாக “கற்றலை மகிழ்வாக்கும்” என்ற தனது நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது. தரமான தயாரிப்பின் அடிப்படை அம்சங்களுடன், படைப்பாற்றல் மற்றும் புதியவற்றைக் கண்டறியும் வாய்ப்புகளையும் இணைப்பதன் மூலம், அன்றாடப் பயன்பாட்டிலுள்ள ஒரு சாதாரண அப்பியாச புத்தகம் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய அனுபவங்களுக்குப் புதிய தரநிலையை உருவாக்குவதே அட்லஸின் இலக்காகும்.
புதிய புத்தக வரிசையானது, தடிப்பான தாள்கள் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்ற பாதுகாப்பான அட்டைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தர அம்சங்களைத் தொடர்ந்து பேணுவதுடன், மூன்று முக்கிய புத்தாக்க அம்சங்களையும் அறிமுகப்படுத்துகிறது. புதிய தலைமுறைச் சிறார்களின் ஆர்வத்துடன் பொருந்தக்கூடிய நவீன அட்டைப்பட வடிவமைப்புகள், புத்தகங்களின் உள் பின்அட்டைகளில் இடம்பெறும் செய்முறைச் செயற்பாடுகள் (DIY Activities) மூலம் நேரடியாகச் செய்து கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள், அத்துடன் QR குறியீடுகள் ஊடாக மேலதிக டிஜிட்டல் கற்றல் உள்ளடக்கங்களை அணுகும் வசதி ஆகியன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று அம்சங்களும் இணைந்து, அச்சிடப்பட்ட பக்கங்களுக்கு அப்பாலும் கற்றலை விரிவுபடுத்தும் அச்சு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த கற்றல் அனுபவத்தை உருவாக்குகின்றன. இதன் மூலம் பயிற்சிப் புத்தகங்களுக்கான புதியதொரு தரநிலையும் நிலைநாட்டப்படுகிறது.
இந்நிகழ்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த அட்லஸ் அக்சிலியா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதானி இந்திரஜித் பிந்துஹேவா அவர்கள்,
“ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, இலங்கைச் சிறார்களின் கற்றல் பயணத்தில் அட்லஸ் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒரு நிறுவனமாக, எமது பொறுப்பு தரமான தயாரிப்புகளை வழங்குவதுடன் மாத்திரம் முடிவடைவதில்லை. நாம் வழங்கும் தயாரிப்புகளின் தரத்தையும் அனுபவத்தையும் தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு பிள்ளையும் தனது ஆற்றல்களை ஆராய்ந்து வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். இந்த மாற்றமானது, பிள்ளைகளின் கற்றலுக்குச் சிறந்த அடித்தளத்தை வழங்குவதற்கும், அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, புதிய “Gold Standard” அப்பியாச புத்தக வரிசை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புத்தகங்களில் இடம்பெற்றுள்ள கவர்ச்சிகரமான கருப்பொருள்களை நேரடி அனுபவங்களாக மாற்றியமைக்கும் வகையில், பல்வேறு ஊடாடும் செயற்பாடுகளைக் கொண்ட ஈடுபாட்டுப் பகுதி (Engagement Zone) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தகங்களின் உள்ளடக்கத்தை விரிவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அனுபவமிக்க ஈடுபாட்டுப் பகுதி, புத்தகங்களில் இடம்பெற்றுள்ள கருப்பொருள்களையும் செய்முறைச் செயற்பாடுகளையும் நேரடி ஊடாடும் அனுபவங்களாக மாற்றியமைத்தது. இதன் மூலம் பிள்ளைகள் அச்சிடப்பட்ட பக்கங்களுக்கு அப்பாலும் அறிவுடன் தொடர்புபட்டு, செயற்பாடுகள் வாயிலாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். கற்றலையும் நிஜ உலக அனுபவங்களையும் அட்லஸ் எவ்வாறு ஒன்றிணைக்கிறது என்பதையும் இந்தப் பகுதி எடுத்துக்காட்டியது. அன்றாடப் பயன்பாட்டிலுள்ள ஒரு சாதாரண அப்பியாச புத்தகத்தைக் கூட ஆர்வம், ஆராய்ச்சி மற்றும் அர்த்தமுள்ள கற்றலுக்கான தொடக்கப் புள்ளியாக மாற்ற முடியும் என்பதை இது வெளிப்படுத்தியது.
இலங்கையின் கல்வி முறைமை செயற்பாடு அடிப்படையிலான கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அதற்குத் துணைபுரியும் பொறுப்பு வர்த்தக நாமங்களுக்கும் உள்ளது என அட்லஸ் நம்புவதாகத் தெரிவித்த அட்லஸ் அக்சிலியா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் கசுனி பண்டார அவர்கள்,
“இலங்கையின் கல்வி முறைமை செயற்பாடு அடிப்படையிலான கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இந்த முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் பொறுப்பு வர்த்தக நாமங்களுக்கு இருப்பதாக நாம் நம்புகிறோம். அட்லஸில், அன்றாடக் கற்றலுக்கு இன்றியமையாத ஒரு பொருளான பயிற்சிப் புத்தகங்களுக்குள்ளேயே இந்தக் கற்றல் அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதற்கான முன்முயற்சியை நாம் எடுத்துள்ளோம். எமது புத்தகங்களில் நேரடிச் செயற்பாடுகளையும் டிஜிட்டல் வழியிலான புதியவற்றைக் கண்டறியும் அனுபவங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம், ‘கற்றலை மகிழ்வாக்கும்’ என்ற எமது நோக்கத்தை நடைமுறைப்படுத்துகிறோம். இதன் மூலம் பிள்ளைகளின் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் நடைமுறைச் செயற்பாடுகள் வாயிலாகக் கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் ஊடாக, அட்லஸ் நிறுவனம் அப்பியாச புத்தகங்களுக்கான “Gold Standard” என்ற தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. நம்பிக்கைக்குரிய தரத்தையும் புத்தாக்கமான கற்றல் அனுபவங்களையும் ஒன்றிணைப்பதன் மூலம், இலங்கைச் சிறார்களுக்கு புதியவற்றைக் கண்டறியவும், ஆராயவும், வளர்ச்சியடையவும் மேலும் பல வாய்ப்புகளை வழங்குவதில் தனது அர்ப்பணிப்பை அட்லஸ் மீண்டும் வலியுறுத்துகின்றது.

































