Nov 26, 2026 - 04:38 PM

2005 ஆம் ஆண்டில் படைப்பாற்றல் சார்ந்த தொழில் வாய்ப்புகள் குறித்த பாரம்பரியப் பார்வைகளுக்கு சவால் விடுத்தது முதல், பல்துறை எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பது வரை மக்கள், முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளால் வடிவமைக்கப்பட்ட 21 ஆண்டுகாலப் பயணத்தை AMDT கொண்டாடுகிறது.
கொழும்பு, இலங்கை – 18 நவம்பர் 2026: படைப்பாற்றல் கல்வியில் 21 ஆண்டுகளை நிறைவு செய்யும் AMDT School of Creativity, புதிய திறமைகளை வளர்த்தெடுப்பதிலும் இலங்கையின் படைப்பாற்றல் சார்ந்த தொழில்துறைகளின் மேம்பாட்டிலும் தான் ஆற்றிவரும் பங்களிப்பை அண்மையில் பெருமையுடன் கொண்டாடியது.
படைப்பாற்றல் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த மரபுவழிப் பார்வைகளை மாற்றியமைக்கும் தொலைநோக்குடன் 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட AMDT, ஒரு பிரத்தியேக படைப்பாற்றல் கல்வி நிறுவனமாகத் தொடங்கி, இன்று படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் வணிகம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு பல்துறை சார்ந்த கல்வி நிறுவனமாகப் பரிணமித்துள்ளது. இதன் மூலம் தொழில்துறைக்குத் தயாரான, எதிர்கால நோக்குடைய சிந்தனையாளர்களை அது உருவாக்கி வருகிறது.
மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்வியாளர்கள், பணியாளர்கள் மற்றும் தொழில்துறைப் பங்காளர்கள் என பல தலைமுறையினரின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்புமே AMDT-யின் வளர்ச்சிக்கும், இலங்கையின் படைப்பாற்றல் கல்வித்துறையில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கும் அடித்தளமாக அமைந்துள்ளன.
தொழில்நுட்பம், தொழில்துறை நடைமுறைகள் மற்றும் உலகளாவிய தேவைகள் ஆகியவை படைப்பாற்றல் சார்ந்த தொழில் வாய்ப்புகளைப் புதுப்பித்து வரும் சூழலில், AMDT தனது கல்வி அணுகுமுறையையும் காலத்திற்கேற்பத் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது. அதன் பல்துறை சார்ந்த கல்விப் பரப்பு இன்று வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, அனிமேஷன், திரைப்படம் மற்றும் ஊடகம், படைப்பாற்றல் கணினியியல் மற்றும் வணிகப் புத்தாக்கம் ஆகிய துறைகளை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற தகைமைகள் மற்றும் கல்விசார் கூட்டாண்மைகள் ஊடாக AMDT-யின் கல்விப் பயணம் மேலும் வலுப்பெற்றுள்ளது. Pearson அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையமாக, அடிப்படை மற்றும் உயர்தர தேசிய தகுதிப் (Foundation and Higher National) பாடநெறிகளை AMDT வழங்குகிறது. 2019 ஆம் ஆண்டில் Falmouth பல்கலைக்கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டாண்மை, இலங்கையர்களுக்கான பிரித்தானிய உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தியதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் (University of East London - UEL) AMDT ஏற்படுத்தியுள்ள புதிய கூட்டாண்மையானது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக அமைந்துள்ளது. இதன் மூலம் இலங்கை மாணவர்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இளமானி மற்றும் முதுமானி பட்டப்படிப்புகளை உள்நாட்டிலேயே தொடர்வதற்கான மேலதிக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் குறித்து AMDT School of Creativity-யின் நிறுவுநர், நிறைவேற்றுப் படைப்பாற்றல் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சதீஷ் குமார் எம் கருத்துத் தெரிவிக்கையில், “என்னைப் பொறுத்தவரை, இந்த 21 ஆண்டுகள் என்பது வெறும் கால அளவு மட்டுமல்ல. நாம் ஏன் AMDT-யை ஆரம்பித்தோம் என்பதற்கான நினைவூட்டலாகும். படைப்பாற்றல் சார்ந்த துறைகளை மக்கள் பார்க்கும் விதத்தை மாற்றியமைத்து, புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடுவதே எமது நோக்கமாக இருந்தது. இன்று, அந்த இலக்கு கல்வியையும் தாண்டி விரிவடைந்துள்ளது. தொழில்துறைகளை வடிவமைக்கவும், புத்தாக்கங்களை முன்னெடுக்கவும், இலங்கையின் எதிர்காலத்திற்குப் பங்களிக்கவும் படைப்பாற்றலுக்குப் ஆற்றல் உண்டு என நாங்கள் நம்புகிறோம்." என தெரிவித்தார்.
அத்துடன், “எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்கும்போது, இலங்கையின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இன்னும் பாரிய பங்காற்ற வேண்டும் என்பதே எமது இலட்சியமாகும். எமது படைப்பாற்றல் சார்ந்த தொழில்துறைகள் வளர்ச்சியடையவும், சர்வதேச அளவில் போட்டியிடவும், அர்த்தமுள்ள பொருளாதார மற்றும் கலாசாரப் பெறுமதியை உருவாக்கவும் தேவையான திறமைகள், ஆற்றல்கள், தொழில்முனைவோர் சிந்தனை மற்றும் புத்தாக்கங்களை வளர்த்தெடுக்க நாம் விரும்புகிறோம்." என்றார்.
"AMDT-யின் அடுத்த அத்தியாயம் என்பது, மக்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவது மட்டுமன்றி, எதிர்காலத்தை அவர்களே வடிவமைப்பதற்கான வல்லமையை வழங்குவதாகவும் அமைய வேண்டும் என நாம் நம்புகிறோம்." என்றார்.
தனது அடுத்த அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கும் AMDT, கல்வி, தொழில்துறை, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றுக்கு இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இதன் ஊடாக, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட, போட்டித்தன்மை மிக்க மற்றும் ஒருங்கிணைந்த இலங்கையின் படைப்பாற்றல் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதே இந்நிறுவனத்தின் தொலைநோக்காகும்.
மேலதிக விபரங்களுக்கு: www.amdt.lk

































