Nov 26, 2026 - 06:11 PM

'CORDELIA EMPRESS' பயணிகள் கப்பல் இன்று (26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
1,600 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 588 பணியாளர்களைக் கொண்ட இக்கப்பலில் வருகை தந்தவர்களுள் 1,800 பேர், இன்றைய தினம் கொழும்பு நகரம், பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
அந்தச் சுற்றுலாப் பயணிகளில் சுமார் 90 வீதமானோர் இந்தியப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசியச் சுற்றுலாச் சந்தையை இலக்காகக் கொண்டு இயங்கும் இக்கப்பல், இந்தியாவிற்குள் உள்நாட்டுக் கடல் சுற்றுலாப் பயணங்களையும் பிராந்திய சர்வதேசப் பயணங்களையும் மேற்கொள்கிறது.
210 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பலில் 11 தளங்களில் 796 பயணிகள் அறைகள் அமைந்துள்ளன.
2026-2027 சுற்றுலாப் பருவகாலத்திற்கு அமைய, மேலும் மூன்று சுற்றுலாப் பயணங்களுக்காக எதிர்வரும் டிசம்பர் 17, 24 மற்றும் 31 ஆகிய திகதிகளிலும் இக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது.

































