Nov 26, 2026 - 07:46 PM

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (26) நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவுத் தலைப்புக்கள் (110, 228 முதல் 236 வரை மற்றும் 326) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
விவாதத்தையடுத்து செலவுத் தலைப்பு 232 திருத்தங்களுடனும், ஏனைய செலவுத் தலைப்புக்கள் திருத்தங்கள் இன்றியும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளன.

































