Nov 27, 2026 - 11:18 AM

HUTCH நிறுவனமானது Apple நிறுவனத்தின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான GNext உடன் இணைந்து, iPhone 18 Pro Series மற்றும் iPhone Duo ஆகியவற்றை இலங்கைச் சந்தையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இலங்கை நுகர்வோருக்கு TRCSL அங்கீகாரம் பெற்ற உண்மையான Apple சாதனங்களைப் பெற்றுக்கொடுக்கும் முக்கிய மைல்கல்லை HUTCH எட்டியுள்ளது.
புதிய iPhone வரிசையில் சந்தையில் உள்ள ஏனைய சலுகைகளிலிருந்து HUTCH சலுகை தனித்துவமாக விளங்குகிறது. அதாவது, முழு வருடத்திற்கும் இலவச டேட்டா மற்றும் அழைப்புச் சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம், கட்டணப் பட்டியல் குறித்த கவலையின்றி, ஆண்டு முழுவதும் தடையற்ற தொடர்பாடல் வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய iPhone சாதனங்களில் ஒன்றைக் கொள்வனவு செய்வதுடன், ஒரு வருடத்திற்கான தொலைத்தொடர்புக் கட்டணங்களையும் முழுமையாகத் தவிர்க்கும் வகையிலான இந்தச் சலுகையானது , இலங்கையின் தொலைத்தொடர்புத் துறையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. iPhone 18 Pro Series அல்லது iPhone Duo ஆகியவற்றைக் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் 20W மின்சக்தி அடாப்டர் மற்றும் பரிசுப் பொதிகளையும் பெற்றுக்கொள்வதுடன், ஒவ்வொரு மாதமும் Apple AirPods வெல்லும் வாய்ப்பையும் பெறுகின்றனர். Hutch நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தொலைபேசிகள் உத்தியோகபூர்வ TRCSL அங்கீகாரம், Apple-இன் அதிகாரப்பூர்வ உத்தரவாதம் மற்றும் Apple Shield Pro பாதுகாப்பு ஆகியவற்றுடன் வழங்கப்படுகின்றன. இந்தப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முன்பக்கத் திரை மற்றும் பின்பக்கக் கண்ணாடி ஆகியவற்றை இலவசமாக மாற்றிக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுவதுடன், இதற்கான பாதுகாப்பு இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
Fortune Global 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள பன்னாட்டு நிறுவனக் குழுமமான CK Hutchison இன் ஆதரவுடன், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளையும் நவீன தொழில்நுட்பப் புத்தாக்கங்களையும் இலங்கை மக்களுக்கு HUTCH நிறுவனம் மேலும் நெருக்கமாகக் கொண்டுவரவுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் உயர்தர அனுபவத்தை வழங்குவதுடன், நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் பங்களிக்கவுள்ளது.

































