Nov 27, 2026 - 11:33 AM

ஜனசக்தி லைஃப்பின் நிறைவேற்றுப் பிரதித் தலைவரும் JXG (ஜனசக்தி குழுமம்) இன் பிரதித் தலைவருமான பிரகாஷ் ஷாஃப்டர், இலங்கையின் காப்புறுதித் துறைக்கு நீண்டகாலமாக ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டி, Sri Lanka Insurance Institute (SLII) நிறுவனத்தினால் 2026 ஆம் ஆண்டுக்கான Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விருது, நவம்பர் 18ஆம் திகதி கொழும்பு Cinnamon Life இல் நடைபெற்ற 23ஆவது International Insurance Congress 2026 இன் ஆரம்ப நிகழ்வின் போது வழங்கப்பட்டது.
பிரகாஷ், 2006ஆம் ஆண்டு முதல் ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியமானதொரு காலகட்டத்தில் அதன் செயற்பாடுகளை வழிநடத்தியதுடன், இலங்கையின் மூன்றாவது பெரிய பொதுக் காப்புறுதி நிறுவனமாக அது வளர்ச்சியடைவதற்கும் பங்களித்துள்ளார். ஜனசக்தி லைஃப்பின் ஸ்தாபகரும் JXG (ஜனசக்தி குழுமம்) இன் ஸ்தாபகரும் கௌரவத் தலைவருமான அவரது தந்தை C.T.A. ஷாஃப்டர் அவர்களால் உருவாக்கப்பட்ட முன்னோடிச் சிந்தனைகளையும் அடித்தளத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில் பிரகாஷின் பங்களிப்பு அமைந்துள்ளது. அத்துடன், காப்புறுதித் தொழில்முறையை மேம்படுத்துவதிலும் இத்துறையின் தரநிலைகளை வலுப்படுத்துவதிலும் அவர் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த JXG (ஜனசக்தி குழுமம்)இன் தலைவர் சந்தன் டி சில்வா, “ஜனசக்தி நிறுவனத்திற்கும் இலங்கையின் காப்புறுதித் துறைக்கும் பிரகாஷ் பல ஆண்டுகளாகப் பங்களித்து வருகிறார். இத்துறை தொடர்பான அவரது ஆழமான புரிதலும், அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பும் அவரது பணிகளில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. ஜனசக்தியின் வளர்ச்சிப் பயணத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ள அவர், நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது முன்வைக்கப்பட்ட முன்னோடித் தொலைநோக்கு சிந்தனையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதுடன், ஒட்டுமொத்த காப்புறுதித் துறையின் வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளார். இந்த அங்கீகாரம் அவருக்கு மிகவும் பொருத்தமான கௌரவமாகும். JXG இல், எங்கள் அனைவருக்கும் இது பெருமையளிக்கும் தருணமாகும்.” என்றார்.
இந்த அங்கீகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனசக்தி லைஃப்பின் தலைவர் அன்னிகா சேனாநாயக்க, “இவ்விருது, காப்புறுதித் துறைக்கு பிரகாஷ் ஆற்றியுள்ள பங்களிப்பையும், ஜனசக்தி நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் அவர் வகித்துள்ள பங்கையும் அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இத்துறை தொடர்பான அவரது அறிவு, தொழில்முறை தரநிலைகளைப் பேணுவதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த அவரது தொலைநோக்குப் பார்வை ஆகியவை ஜனசக்தி நிறுவனத்திற்கும் ஒட்டுமொத்த காப்புறுதித் துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. இத்தகைய சிறப்புமிக்க விருது ஊடாக அவரது சாதனைகள் அங்கீகரிக்கப்படுவதைக் கண்டு நாம் பெருமையடைகிறோம்.” என்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான பிரகாஷ், Chartered Insurance Institute (CII) இன் Fellow தகைமையைப் பெற்ற இளம் தொழில்முறை நிபுணர்களில் ஒருவர் ஆவார். மேலும், இலங்கை காப்புறுதி சங்கத்தின் தலைவராகவும், Sri Lanka Institute of Directors நிறுவனத்தின் மன்ற (Council) உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் காப்புறுதித் துறையின் தொழில்முறை மற்றும் நிறுவன ரீதியான தரநிலைகளை மேம்படுத்துவதற்கு பங்களித்துள்ளார்.
SLII Hall of Fame விருதானது, தொழில்முறை ரீதியான சாதனைகள், காப்புறுதித் துறையில் பெற்றுள்ள தகைமைகள் மற்றும் இத்துறை மற்றும் நிறுவனத்திற்காக நீண்டகாலமாக ஆற்றிய சேவைகள் ஆகியவற்றை அங்கீகரித்து வழங்கப்படுகிறது. 23ஆவது International Insurance Congress 2026, ““Navigating New Horizons and Shaping the Future of Insurance” என்ற தொனிப்பொருளின் கீழ் நவம்பர் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இவ் விருது மூலம் பிரகாஷ், இலங்கையின் காப்புறுதித் துறையின் வளர்ச்சிக்கு நீண்டகாலமாக ஆற்றிவரும் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், ஜனசக்தி லைஃப் மற்றும் JXG (ஜனசக்தி குழுமம்) ஆகியவற்றுக்கும் பெருமையளிக்கும் தருணமாக அமைந்துள்ளது.
ஜனசக்தி லைஃப் பற்றி
JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்டி வருகிறது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) உரிமம் பெற்றுள்ள இது, நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

































