Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
யாழில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை!

யாழில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை!

கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

எங்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு!

எங்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு!

மயிலிட்டி மக்களின் காணி மீட்புப் போராட்டம்!

மயிலிட்டி மக்களின் காணி மீட்புப் போராட்டம்!

அது ஒரு சிறந்த சட்டமூலமாக அமையும்!

அது ஒரு சிறந்த சட்டமூலமாக அமையும்!

பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பணப்பையை ஆட்டைய போட்ட நபர்!

பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பணப்பையை ஆட்டைய போட்ட நபர்!

இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் விநியோகம்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

    Mobitel Inner 1278

    மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அனந்த் அம்பானி இருவரும் ஆன்மீக குரு சத்குருவை மேடையில் சென்று சந்தித்தனர். அப்போது அனந்த் அம்பானி, சத்குருவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஷாருக்கான் குறுக்கிட்டு சில வார்த்தைகளை பேசினார்.


    அப்போது அனந்த் அம்பானி, கொஞ்சம் அமைதியாக இருக்கும்படி கூறுவது போல் விரலை காட்டி சைகை செய்தார். இந்த வீடியோவை சோசியல் மீடியா பிரபலம் சுவிக்யா சர்மா இணையத்தில் பகிர்ந்தார். இதனையடுத்து வீடியோ டிரெண்ட்டாக, அந்த இன்ஃப்ளூயன்சருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பட்டதாக செய்திகள் பரவியது.


    அந்த நோட்டீஸில் 48 மணிநேரத்திற்குள் அந்த வீடியோவை நீக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தங்கள் தரப்பிலிருந்து எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை என்று ஷாருக்கான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


    இதுதொடர்பாக ஷாருக்கான் தரப்பில்,


    23 நவம்பர் 2026 இல் ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பு, சோசியல் மீடியாக்களிலும், சில செய்தி அறிக்கைகளிலும் பரப்பட்டு வருகிறது. ஷாருக்கானின் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் என்ற முறையில், இந்த அறிவிப்பு அவராலோ, அவர் சார்பாகவோ வழங்கப்படவில்லை.


    எங்களை உள்ளடக்கிய எந்தவொரு வழக்கறிஞருக்கோ, சட்ட நிறுவனத்திற்கோ நோட்டீஸ் வழங்குமாறு கான் அறிவுறுத்தவில்லை. ஊடக நிறுவனங்களும், சமூக ஊடகப் பக்கங்களும் செய்தி வெளியிடுவதற்கு முன் இதை சரிபார்க்கவும். இந்த அறிவிப்பு மிஸ்டர். கானுக்கு உரியது என்று கூறும் உள்ளடக்கத்தை திருத்தவோ, அகற்றவோ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று ஷாருக்கான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.