Nov 27, 2026 - 01:10 PM

2011ஆம் ஆண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், மேலதிக சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து இணையவழி ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு அவர் தனது சாட்சியத்தை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

































