Nov 27, 2026 - 02:44 PM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

தமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் காணி விடுவிப்புப் போராட்டம் 32 ஆவது வாரமாகவும் வலிசுமந்த உணர்வுகளுடன் இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எதிர்காலத்திற்கும் அடிப்படையாக விளங்கும் பூர்வீகக் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், குறித்த காணிப் பகுதிகளில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், உல்லாசத்துறை சார்ந்த பயன்பாடுகள் இடம்பெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மக்களின் காணிகள் அவர்களிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டிய நிலையில், அவை இராணுவத்தின் விவசாயத் தேவைகளுக்கும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவ்வாறான பயன்பாடுகளே காணி விடுவிப்பில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களா என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

































