Nov 27, 2026 - 03:21 PM

இப்பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கொமர்ஷல் வங்கியானது தனது கடன் மற்றும் வரவு அட்டைதாரர்களுக்குக் கொண்டாட்டத்திற்கான பல நன்மைகளை அளிக்கும் வகையில், 'வியப்புடன் பாருங்கள், சலுகைகள் ஏராளம்; அனைத்தையும் கொள்வனவு செய்ய உங்களைத் தூண்டும்!' எனும் தொனிப்பொருளின் கீழ், நாடு தழுவிய ரீதியில் 680 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் 60% வரையிலான பிரம்மாண்டமான விலைக்கழிவுச் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
2026 நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் இச் சலுகைகள், உணவகங்கள் மற்றும் உணவு விநியோகம், பயணம், ஓய்வுப் பொழுதுபோக்குகள், இலத்திரனியல் சாதனங்கள், ஆடை வடிவமைப்பு மற்றும் அத்தியாவசியக் கொள்வனவுகள் உட்பட 15 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விரிவான சலுகைகளை உள்ளடக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் பண்டிகைக் கால குடும்பச் சுற்றுலாக்கள், அத்தியாவசியக் கொள்வனவுகள் அல்லது தமக்கும் தமது அன்பிற்குரியவர்களுக்கும் வழங்கும் சிறப்புப் பரிசுகளைத் திட்டமிட்டாலும், கொமர்ஷல் வங்கியின் அட்டைகள் செலவுகளைக் குறைப்பதுடன் அப்பண்டிகைக் கால அனுபவத்தை மேலும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமானதாகவும் மாற்றுகின்றன.
இப் பிரச்சாரம் குறித்து கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் அட்டை மையத்தின் பிரதான முகாமையாளர் திரு. சீவலி விக்கிரமசிங்க, 'கொமர்ஷல் வங்கி அட்டைகளின் இப் பருவகாலப் பிரச்சாரத்தின் மையப்பொருள் எமது வாடிக்கையாளர்கள் மீதான ஆழமான மதிப்பீடு மற்றும் கௌரவமாகும். எமது மதிப்புமிக்க அட்டை வைத்திருப்பாளர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் நாங்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளோம், அதனால்தான் அவர்களின் விசுவாசத்திற்கு உண்மையான முறையில் பலனளிக்கும் வகையில் இச்சலுகை வரிசையை நாங்கள் வடிவமைத்துள்ளோம். வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைக்கு மிகவும் பொருத்தமான சலுகைகளை வழங்குவதன் மூலம், நாங்கள் வெறுமனே பணப்பரிவர்த்தனைகளை மட்டும் இலகுபடுத்துவதில்லை மாறாக அவர்களின் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சி, எளிமை மற்றும் செழிப்புக்கு எம்மாலான பங்களிப்பை தீவிரமாக வழங்குகிறோம்,' எனக் குறிப்பிட்டார்.
இச்சலுகைப் பிரச்சாரம் கொமர்ஷல் வங்கியின் Visa, Mastercard, UnionPay மற்றும் LankaPay JCB கடன் மற்றும் வரவு அட்டை வைத்திருப்பாளர்கள் அனைவருக்கும் உரித்தானதுடன், இதில் பங்கேற்கும் வியாபார நிலையங்களில் விலைக்கழிவுகளைப் பெற்றுக் கொள்ள
கடன் அட்டை வைத்திருப்பாளர்கள் நுகர்வோர் மின்சாதனப் பொருட்கள் கொள்வனவின் போது இலகு கொடுப்பனவுத் திட்டங்களின் நன்மைகளைப் பெற முடிவதுடன், தகுதிபெறும் கொள்வனவுகளை வங்கியின் தொடர்பு மையத்தை அழைத்து மாதாந்தத் தவணைக்கட்டணங்களாக மாற்றிக்கொள்ளக்கூடிய Call & Convert வசதியையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், பிரீமியம் அட்டை வைத்திருப்பாளர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சலுகைகள் இப் பண்டிகைக் கால நன்மைகளை மேலும் அதிகரிக்கின்றன.
பங்கேற்கும் விற்பனை நிலையங்கள் மற்றும் பருவகாலச் சலுகைகள் பற்றிய முழுமையான விவரங்களை வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.combank.lk மற்றும் வங்கியின் சமூக ஊடகப் பக்கங்கள் வழியே பெற்றுக் கொள்ள முடியும். மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் வங்கியின் 24 மணி நேரத் தொடர்பு மையத்தை 1316 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

































