Nov 27, 2026 - 07:33 PM

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
2027ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின் 05வது நாளான இன்று (27) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செலவுத் தலைப்புக்கள் (124, 216, 331) மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் (151, 290) திருத்தங்கள் இன்றியும், வாக்கெடுப்பு இன்றியும் நிறைவேற்றப்பட்டன.
அதேநேரம் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் 151ஆம் இலக்க செலவுத் தலைப்பு திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றியும் நிறைவேற்றப்பட்டது.

































