Nov 27, 2026 - 11:02 PM

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கைத் தொடரின் கீழ் இதுவரை 116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் தொடர்பில் இன்று (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதற்கமைய இதுவரை 379 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 66 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

































