Nov 28, 2026 - 06:40 PM
By கண்டி நிருபர் ராஜ்
By கண்டி நிருபர் ராஜ்

டித்வா அனர்த்தத்தின் போது 14 பேர் உயிரிழந்த பெரும் பரபரப்பான சம்பவம் குருந்துவத்தை, தொலஸ்பாகை – பரகல பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.
அனர்த்தத்தின் போது உயிரிழந்த 14 பேருக்கு இன்று (28) தொலஸ்பாகை – பரகல பிரதேசத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, பிரார்த்தனைகளில் ஈடுபட்டதுடன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் நினைவாக 2,000 உணவுப் பொதிகள் (பார்சல்கள்) வழங்கப்பட்டன.

































