Nov 28, 2026 - 08:29 PM

இலங்கை கடற்படையினரும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினரும் இணைந்து மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு தொகை பயணப் பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாத்தறை - மிரிஸ்ஸ, தல்அரம்ப கடற்கரைப் பகுதியில் இன்று (28) மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பயணப் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்தப் பயணப் பைகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் படகொன்றும் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

































