Nov 29, 2026 - 12:31 PM

கடந்த சில மாதங்களாக இலங்கையின் வானிலையில் ‘எல் நினோ’ வானிலை நிகழ்வு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக முன்னைய ஆண்டுகளை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலையாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், வடகீழ் பருவப்பெயர்ச்சி ஆரம்பமாவதோடு எல் நினோ தாக்கத்தின் தன்மையிலும் மாற்றம் ஏற்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாத முற்பகுதி முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது எல் நினோ நிகழ்வின் வழக்கமான இயல்பு எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தற்போது நிலவும் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இந்த ஆண்டு டிசம்பர் மாத நடுப்பகுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் பின்னர் மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறையக்கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய வானிலை எதிர்வுகூறல்களின்படி, எல் நினோ தாக்கம் அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்காலப்பகுதி முழுவதும் இலங்கை முழுவதும் மழைவீழ்ச்சியில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

































