Nov 29, 2026 - 04:30 PM

புத்தளம் நகரில் நடைபாதையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் புத்தளம் நகர சபைத் தலைவர் ரின்சாட் அஹமட் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு நாளை (30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

































