Header Logo

கிழக்கு
புலனாய்வு செய்தியாளர் விருது!

Oct 21, 2024 - 04:52 PM -

0

புலனாய்வு செய்தியாளர் விருது!

இலங்கையில்  கலை, இலக்கியம், ஊடகத்துறை,சமூகப்பணி என்பவற்றில் சாதனை படைத்த   பல்துறை  ஆளுமைகளைக்  கௌரவிக்கும் Sky Tamil ஊடக அமைப்பின்    விருதுகள் வழங்கி கெளரவிக்கும்  விழா மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு   கடந்த 19 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீட அரங்கில் ஸ்கை தமிழ், துணிந்தெழு பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெ.எம். பாஷித்  தலைமையில் இடம்பெற்றது.

தேசிய ,சர்வதேச விருது விழாக்களுக்கு நிகராக  ஏற்பாடு செய்யப்பட்ட இவ் மாபெரும் விருது விழாவில் கடந்த 18 வருடங்களுக்கு மேலாக  ஊடகத்துறையில் செயற்பட்டு வரும்  பாறுக் ஷிஹான் புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான  சிறந்த  புலனாய்வு செய்தியாளர்(investigation journalist ) விருதினை பெற்றுக் கொண்டார்.

கடந்த வருடம் கட்டாரில் நடைபெற்ற இந்த விழா இரண்டாவது தடவையாக இலங்கையில் இம்முறை நடைபெற்றதுடன் இந்த விருது விழாவில் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகரும், தொழிலதிபருமான புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத், கலை கலாச்சார பீடாதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலர் உட்பட நிறைய பிரமுகர்கள் பலரும் கௌரவ, விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title