Oct 28, 2024 - 01:56 PM -
0
வில்கமுவ - பெரகனத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஒருவர் நேற்று (27) உயிரிழந்துள்ளளார்.
நாமினிகம, பெரகனத்த பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் வீடு மற்றும் தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாக்க மின்சார வேலியை தயார் செய்து, மாலை 6 மணிக்கு மின்சாரம் வழங்கி மறுநாள் காலை 6 மணிக்கு அணைக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால், சம்பவத்தன்று மின்சாரத்தை துண்டிக்க வீட்டில் இருந்தவர்கள் மறந்த நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள விளாம்பழ மரத்தில் இருந்து விளாம்பழத்தைப் பறிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.