Header Logo

செய்திகள்
இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

Nov 29, 2024 - 07:35 PM -

0

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 516 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாரிக்கா அணி 5 விக்கெட்டுக்களுக்கு 366 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதன்படி, இலங்கை அணியை விட 515 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் Tristan Stubbs அதிகபட்சமாக 122 ஓட்டங்களையும், அணித்தலைவர் Temba Bavama 113 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அசித பெர்ணான்டோ ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அதன்படி, போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் இலங்கை அணிக்கு 516 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 191 ஓட்டங்களையும் இலங்கை அணி 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

title