Feb 20, 2025 - 10:52 AM -
0
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று (19) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், சட்டத்தரணி வேடமணிந்து வந்து கொலையாளிக்கு உதவிய பெண் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

