Mar 13, 2025 - 08:54 AM -
0
மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஐந்து இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாளாந்தம் சுமார் 250 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கதிர்வீச்சு சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட இயந்திரங்களை மீட்டெடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சானக தர்மவிக்ரம குறிப்பிட்டார்.