Mar 13, 2025 - 04:36 PM -
0
ஹட்டன், கொட்டகலை நகரில் உள்ள கோவிலில் நடைபெற்ற திருவிழாவிற்கு கொண்டு வரப்பட்ட யானை, ஒருவரைத் தாக்கியுள்ளது.
யானையின் தாக்குதலில் காயமடைந்த நபர் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபரின் நிலை மோசமாக இல்லை என்றும் திருவிழா ஏற்பாட்டுக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று (12) கோவில் ஊர்வலம் முடிந்து, யானை கோயில் வளாகத்தில் ஒரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் யானைக்கு உணவளிக்க முயன்றுள்ளார்.
இதன்போதே, குறித்த நபரை யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யானைப் பாகன் அதிக குடிபோதையில் இருந்ததால், தாக்கப்பட்ட நபர் யானைக்கு உணவளிக்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

