Header Logo

செய்திகள்
செங்கலடியில் மோட்டார் குண்டு மீட்பு

Mar 13, 2025 - 09:07 PM -

0

 செங்கலடியில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் காணியில், நிலத்தில் புதையுண்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று நேற்று (12) மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி பிரதேசத்திலுள்ள முதலியார் நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள, வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான காணியில் குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காணியை பராமரித்து வரும் ஒருவர், சம்பவ தினமான நேற்று துப்புரவு பணிகளை மேற்கொள்ளும்போது, நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றைக் கண்டு, உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்தார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குண்டை மீட்டு, அதனை செயலிழக்கச் செய்வதற்காக நீதிமன்ற அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

title