செய்திகள்
வெலிவேரிய துப்பாக்கிச் சூடு - வௌியான புதிய தகவல்

Mar 14, 2025 - 09:12 AM -

0

வெலிவேரிய துப்பாக்கிச் சூடு - வௌியான புதிய தகவல்

வெலிவேரிய அரலியகஸ்தெக சந்திப் பகுதியில் நேற்று (13) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்திருந்தார்.


காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கிச் சூட்டில் அந்த நபரின் இடது கை காயமடைந்துள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த பின்னர், அவர் வாகனத்தை நிறுத்தாமல் வைத்தியசாலை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05