செய்திகள்
இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

Mar 14, 2025 - 10:05 AM -

0

இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.


அச்சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் சாமலி வத்சலா குலதுங்க தெரிவிக்கையில், பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் இயங்கும் அலுவலகங்களை மூடுவதற்கும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


எவ்வாறாயினும், இரவு நேர முறைமைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.


கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05