Header Logo
SLIC
ஜோதிடம்
2025 தமிழ் புத்தாண்டு - சூரியனைப் போல் பிரகாசிக்க போகும் 5 ராசிகள்!

Apr 3, 2025 - 12:55 PM

2025 தமிழ் புத்தாண்டு - சூரியனைப் போல் பிரகாசிக்க போகும் 5 ராசிகள்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஒவ்வொரு தமிழ் ஆண்டும் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குரோதி ஆண்டு முடிந்து, சித்திரை 1 ஆம் திகதி முதல் 'விசுவாசுவ' ஆண்டு பிறக்கிறது. 

இந்த புத்தாண்டில் எந்தெந்த ராசிகளுக்கு மிகவும் சுப பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம். 

தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1 ஆம் திகதி (ஏப்ரல் 14) பிறக்கிறது. 

ஜோதிடத்தில் சூரிய பகவான் காலசக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையக்கூடிய நாளில் புத்தாண்டு பிறக்கிறது. 

60 ஆண்டு அடங்கிய பட்டியலில் வரக்கூடிய விசுவாசுவ (உலகநிறைவு) ஆண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டிற்கான பொருள் என்ன, இந்த தமிழ் புத்தாண்டில் எந்தெந்த ராசிகள் சூரியனைப் போல் ஜொலிக்க உள்ளனர் என தெரிந்து கொள்வோம். 

தமிழ் புத்தாண்டு தொடக்கத்தின் போது சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார், ரிஷபத்தில் குரு, கடகத்தில் செவ்வாய், கன்னி ராசியில் கேது, துலாம் ராசியில் சந்திரன், மீன ராசியில் சனி, சுக்கிரன், புதன், ராகு என நான்கு கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. 

எப்படி புத்தாண்டு தொடக்கத்தில் கிரகங்களின் அமைப்பின் காரணமாக 6 ராசியை சேர்ந்தவர்களுக்கு தொழில் மற்றும் வேலை தொடர்பாக லாபம் ஏற்படக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் ராசிகளை இங்கு தெரிந்து கொள்வோம். 

ரிஷப ராசி - புதிதாக பிறக்கக்கூடிய விசுவாசுவ தமிழ் புத்தாண்டில் ரிஷப ராசிக்கு பலவிதத்தில் நன்மை கிடைக்கக்கூடியதாக அமையும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வேலை தொடர்பாக கொஞ்சம் போராட்டமான சூழல் இருந்தாலும் நிச்சயமான வெற்றி கிடைக்கும். உங்களுக்கு பலவிதத்தில் நல்ல பலன்கள் தேடி வரும். கடின உழைப்பிற்கான முழு பலனை பெறுவீர்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். 

குடும்பத்திலும், சமூகத்திலும் மரியாதை அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்க நிம்மதியான சூழல் உருவாகும். குறிப்பாக பிள்ளைகள் தொடர்பான சிக்கல்கள் நீங்கும். 

மிதுன ராசி - விசுவாசுவ தமிழ் புத்தாண்டில் மிதுன ராசியில் குரு பகவான் நுழைய உள்ளார். அதோடு சனி சாதகமான அமைப்பு இருப்பதால் உங்களுக்கு ஆண்டு முழுவதும் சிறப்பான முன்னேற்றமும், வெற்றிகளும் பெறக்கூடிய பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

வேலையை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில், வியாபாரத்திற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இதுவரை உங்கள் தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் உறவில் இனிமையும், இணக்கமான சூழலும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படக் கூடியதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

கன்னி ராசி - கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த விசுவாசுவ தமிழ் புத்தாண்டில் கிரகங்களின் அமைப்பு பலவிதத்தில் உங்களுக்கு சாதகமாக அமையும். குறிப்பாக சனியின் அமைப்பானது, உங்கள் கடின உழைப்பை அதிகரித்து அதில் சிறப்பான வெற்றியை தர உதவுவார். 

வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளிகள் ஸ்தானத்தில் சனி அமர்வதால், பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தையும், லாபத்தையும் அதிகரிக்க உதவும். 

மாணவர்கள் படிப்பு தொடர்பான விஷயத்தில் வெற்றி கிடைக்கும். உங்கள் வேலை, படிப்பு, குடும்பப் பொறுப்பு என எல்லா விதத்திலும் சரியான வகையில் செயல்பட கவனம் அதிகரிக்கும். உங்கள் உறவில் இணக்கமான சூழல் இருக்கும். 

தனுசு ராசி - தனுசு ராசிக்கு விசுவாசுவ தமிழ் புத்தாண்டு பலவிதத்தில் நன்மை தரும். குறிப்பாக இந்த ஆண்டு குருவின் ஏழாம் பார்வை நேரடியாக உங்கள் ராசியின் மீது விழுகிறது. இதனால் சிரமங்கள் விலகும். பல விதத்தில் நன்மை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சில புதிய நபர்களின் தொடர்பு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவும். 

குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களை சுற்றியுள்ளவர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் சூழல் சாதகமாக அமையும். சட்டம் தொடர்பான விஷயங்களில் பெரிய வெற்றியை பெறலாம். 

மகர ராசி - மகர ராசிக்கு விசுவாசுவ தமிழ் புத்தாண்டில், கடந்த சில காலமாக இருந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். குறிப்பாக இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரை சனியிலிருந்து விடுபடுவீர்கள். அதோடு ஆறாம் வீட்டில் குருவின் சஞ்சாரத்தால் ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு பல புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத புதிய உயரங்களை அடையலாம். 

தொழில் தொடர்பாக புதிய உறவுகளை உருவாக்குவதில் கவனம் தேவை. இந்த ஆண்டில் புதிய வருமான ஆதாரங்கள் பெறுவீர்கள். காதலில் உள்ளவர்கள் திருமண வாழ்க்கையில் இணைய வாய்ப்புள்ளது. திருமணம் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். 

கும்ப ராசி - கும்ப ராசிக்கு விசுவாசுவ தமிழ் புத்தாண்டில், ஏழரை சனி நடக்கக்கூடிய காலம் என்றாலும், ராசிக்கு 5ஆம் இடத்தில் குருவின் பெயர்ச்சி நடக்க உள்ளது. இதனால் உங்களின் குடும்ப சூழல் மகிழ்ச்சியானதாக மாறும். உங்களின் நிதிநிலை முன்னேற்றம் அடையும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

திருமணம், குழந்தைப் பேறு என பல சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். குருவின் பார்வையால் ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இதுவரை செய்து வந்த உங்கள் கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களை சரியாக நிர்வகித்தால் வெற்றி நிச்சயம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278