Apr 10, 2025 - 06:56 AM -
0
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பெப்ரவரி 14ஆம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தெரிவித்தது.
ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வத்திக்கான் திரும்பினார். தற்போது அங்கு முழு ஓய்வு எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணியார் தம்பதி இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வத்திக்கானில் ஓய்வு எடுத்து வரும் போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் திடீரென சந்தித்தனர். அப்போது அவரது உடல்நலம் பற்றி விசாரித்ததாகக் கூறப்படுகிறது.