உலகம்
கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்து : பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

Apr 10, 2025 - 10:18 AM -

0

கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்து : பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது. 

இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள். 

நேற்று முன்தினம் அந்த விடுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருந்தனர். 100இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். 

சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது. 

இந்நிலையில், கட்டிடத்தில் சிக்கி இறந்து போனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்த 160 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05