உலகம்
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

Apr 11, 2025 - 02:01 PM -

0

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரில் இன்று (11) காலை 8.02 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

 

இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

 

முன்னதாக கடந்த மார்ச் 28 ஆம் திகதி மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

 

மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் அதே நாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

 

மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,600 ஐ கடந்துள்ளது. 5,017 பேர் காயமடைந்துள்ளனர். 148 பேர் மாயமாகி உள்ளனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05