Apr 12, 2025 - 04:26 PM -
0
பாகிஸ்தானில் இன்று (12) மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதாகவும் இந்த நிலநடுக்கத்தினால் பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக், சாக்வால் மற்றும் மியான்வாலி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெஷாவர், மர்தான், மொஹ்மாந்து மற்றும் ஷாப்கதார் ஆகிய நகரங்களில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் தேசம் குறித்த தகவல் வௌியாகவில்லை.