Header Logo
SLIC
ஜோதிடம்
இந்த ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்!

May 21, 2025 - 05:51 PM

இந்த ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்!
Mobitel Inner 1278
EDEX Inner

2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். ராகு மே மாதம் 18 ஆம் திகதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார்.

 

 கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் திகதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

 

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம். துலாம் ராசி பலன் துலாம் ராசிக்காரர்களுக்கு ரிஷபம் ராசியைப் போலவே மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கப் போகிறது. 

 

அருமையான நேரம் இது. குரு 9 ஆம் இடத்தில் இருந்து தனது ராசியைப் பார்க்கிறார். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ஆவணங்கள் விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். விசா கிடைக்கும். கிடைக்காத விஷயங்கள் அனைத்துமே இனி கிடைக்கத் தொடங்கும்.

 

பாசிட்டிவான காலகட்டமாக இருக்கும். நண்பர்கள் பிரிந்து செல்லும் நிலை ஏற்படும். இல்லையெனில் உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகள் விஷயத்தில் கவனம் தேவை. குழந்தைகள் விஷயத்தில், பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துகளில் சில பிரச்சனைகள் ஏற்படும்.

 

இருப்பினும் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு பொன்னான காலகட்டமாக இருக்கும். வேலையில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், அதில் வெற்றியைப் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும் நேரமாக இருக்கும். சொந்த பந்தங்கள் முன்னாடி ஒன்றும், பின்னாடி ஒன்றும் பேசுவீர்கள். எல்லோரையும் ஒன்றிணைப்பதில் படாத பாடு படுவீர்கள்.

 

வெளிநாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர விரும்புபவர்களுக்கு அந்த காரியம் நடக்கும். வெளியூரில் வீடு வாங்குவது, இடம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். தந்தையின் மூலம் நிறைய அனுகூலங்கள் உண்டாகும். வெளியூரில் வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள். மரியாதை அப்பா உங்களுக்கு பெரிய உதவிகளை செய்வார்கள். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் சாதகமான காலகட்டமாக இருக்கும். பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும்.

 

சமுதாயத்தில் அந்தஸ்து, கெளரவம் உயரும். ஏதாவதொரு தடைகள் வந்தாலும் அதனைக் கண்டு கலங்கத் தேவையில்லை. பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பிக்கச் செய்யவே சில தடைகள் ஏற்படும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். ஆனால் அமோகமான வளர்ச்சியும், முன்னேற்றமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், திருமணம், வாழ்க்கை தொடர்பான விஷயங்களால் சிறு சிறு பாதிப்புகளைச் சந்திப்பீர்கள். 

 

வழிபட வேண்டிய தெய்வம் அஷ்ட லட்சுமி வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு அற்புதமான பலன்களைத் தரும். குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் இந்த காலகட்டத்தில் ஜாக்பாட், லாபம், பண வரவு, சொத்துகள் வாங்கும் காலகட்டமாக இருக்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278