Header Logo
SLIC
மலையகம்
ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஜக்கியமில்லை!

May 26, 2025 - 01:20 PM

ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஜக்கியமில்லை!
Mobitel Inner 1278
EDEX Inner

ஜனநாயக ரீதியில் நாட்டு மக்கள் வழங்கிய ஆனையோடு நாடளவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்குமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

 

கொட்டகலை தேசிய கல்லுாரியில் இடம்பெற்ற அல் முஸ்தப்பா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளை நிறைவு செய்து கொண்ட மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

அல் முஸ்தப்பா சர்வதேச பல்கலைக்கழகத்தின் இலங்கை நாட்டுக்கான ஈரான் தூதுவர் ஷியாட் சீனுவேல் அபீதீன் மிராப்டீம் மற்றும் நுவரெலியா கோட்டக் கல்வி பணிப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

 

நடந்து முடிந்து உள்ளூராட்சி சபை தேர்தலில் அதிகமான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்று இருக்கிறது. அந்த வகையில் ஆட்சியமைக்க கூடிய வாய்ப்புகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளது.

 

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 உள்ளூராட்சி சபைகளிலும் எமது அரசாங்கம் ஆட்சியமைக்கும் மக்கள் வழங்கிய ஜனநாயகத்தை ஒரு சிலர் சீர்குலைப்பதற்காக எதிரும் புதிராக இருந்தவர்கள் இன்று அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு மீண்டும் ஊழல்களில் ஈடுபட்டு வருவாயை ஈட்டிகொள்வதற்காக இன்று ஒன்றினைந்துள்ளார்கள்.

 

ஐக்கிய மக்கள் சக்தி நாட்டில் இன்று ஐக்கியமில்லாத ஒரு கட்சியாக காணப்படுகிறது. நாங்கள் தெளிவாக கூறுகிறோம் இந்த நாட்டை வங்குரோத்து அடைய செய்த எந்த கட்சிகளுடனும் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ள போவதில்லை மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள்.

 

சுயாதீனமாக செயற்பட்டவர்கள் ஆகியோர் நாங்கள் முன்னெடுக்கின்ற நல்லபணியில் இனைந்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். நாங்கள் உறுப்பினர்களை அதிகமாக பெற்றுள்ளமையால் ஆட்சியமைக்கும் அதிகாரமும் பொருப்பும் எம்மிடமுள்ளது.

 

அவ்வாறு ஆட்சியமைக்கும் போது எங்களுக்கு கட்சிகளோ, குழுக்களோ ஒத்துழைப்பு வழங்கலாம் ஐக்கிய மக்கள் சக்தியில் ஒற்றுமைகிடையாது சஜித் பிரேமேதாசவுக்கு கட்சியை முன்னெடுத்து செல்ல முடியாத ஒரு சூழ்நிலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதியாவது என்பது ஒரு கேலிக்கூத்தாக காணப்படுகிறது என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278