Header Logo
SLIC
மலையகம்
சத்தியபிரமாணம் செய்துக்கொண்ட இ.தொ.காவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்

Jun 7, 2025 - 02:18 PM

சத்தியபிரமாணம் செய்துக்கொண்ட இ.தொ.காவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் நிகழ்வு கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்றைய தினம் (07) இடம்பெற்றது. 

நுவரெலியா மாவட்டத்தில் தெரிவாகிய 41 உறுப்பினர்கள் உட்பட 6 மாவட்டங்களில் தெரிவாகிய 62 உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர். 

2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுக்கும், பட்டியலூடாக தெரிவாகிய சபை உறுப்பினர்களுக்கான சத்தியபிரமாண நிகழ்வானது, பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன்தொண்டமான் தலைமையில் இடம்பெற்றிருந்தது. 

நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குரான்கெத்த ஆகிய பிரதேச சபைகளிலும், ஹட்டன்-டிக்கோயா, தலவாக்கலை-லிந்துலை, ஆகிய நகர சபைகளிலும், நுவரெலியா மாநகர சபையிலும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 39 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது. 

மேலும், வலப்பனை பிரதேச சபையில் கதிரை சின்னத்தில் போட்டியிட்டு 2 உறுப்பினர்கள் அடங்களாக மொத்தமாக 41 உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது. 

பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்ல, ஹாலிஎல ஆகிய பிரதேச சபைகளில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 4 உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட அதேவேளை, ஹல்துமுள்ள, ஹப்புதலை, லுனுகலை ஆகிய பிரதேச சபைகளில் தொலைப்பேசி சின்னத்தில் போட்டியிட்டு 5 உறுப்பினர்கள் உள்ளடங்களாக 9 உறுப்பினர்களையும் மொத்தமாக பதுளை மாவட்டத்தில் பெற்றுக்கொண்டுள்ளது. 

மாத்தளை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாத்தளை, இரத்தோட்டை, அம்பன்கங்ககோரளை ஆகிய பிரதேச சபைகளிலும், மாத்தளை மாநகர சபையிலும் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு மொத்தமாக 6 உறுப்பினர்களை தன்வசப்படுத்திக்கொண்டுள்ளது. 

மேலும் கண்டி மாவட்டத்தில் பன்வில, உடபலாத்த, பாத்தஹேவாஎட்ட ஆகிய பிரதேச சபைகளில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 4 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் தொலைப்பேசி சின்னத்தில் போட்டியிட்டு 1 உறுப்பினரையும், இரத்தினபுரி மாவட்டம் காவத்தை பிரதேச சபையில் 1 உறுப்பினர் உள்ளடங்களாக மொத்தமாக ஆறு மாவட்டங்களிலும் 62 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும். 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், அனுசியா சிவராஜா, பிரதி தவிசாளர் ராஜதுரை மற்றும் கட்சியில் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளடங்களாக பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

More Images
more-images
more-images
more-images
more-images

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278