Jun 7, 2025 - 10:09 PM -
0
மருத்துவ ஆய்வக தொழில் வல்லுனர்களின் சங்கம் மூன்றாவது நாளாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தத்தை நாளை (08) காலை 8:00 மணிக்கு முடிவுக்கு கொண்டுவருவதற்கு இன்று (07) மாலை தீர்மானித்துள்ளது.
நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்களின் ஒன்றியத்தின் நான்கு தொழிற்சங்கங்கள் இன்று காலை தமது வேலை நிறுத்தத்தை கைவிட்ட நிலையில், மருத்துவ ஆய்வக தொழில் வல்லுனர்கள் மட்டுமே இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி, நாளை காலை 8:00 மணிக்கு தமது வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.