Header Logo

வடக்கு
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் பல மாதங்களின் பின் கைது

Jun 8, 2025 - 09:47 AM -

0

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் பல மாதங்களின் பின் கைது

மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா மற்றும் பட்டி தோட்டத்தை சேர்ந்த வேணுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் இன்று (08) மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சட்ட விரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது அழைப்பின் பெயரில் ஒன்று கூடிய பொதுமக்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் இடம் பெறும் பல்வேறு சீர்கேடுகளுக்கு எதிராக அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை அதிகாரிகளால் வழங்கப்பட்ட போதிலும் அதை ஏற்க மறுத்த சில  போராட்டக்காரர்களால் போராட்டம் வன்முறையாக மாற்றம் அடைந்தது.

இந்த நிலையில் விதிகளை மறித்தும் டயர்களை கொளுத்தியும் போராட்டகாரர்கள் சிலர் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்த நிலை போராட்டத்தில் சில விசமிகள் புகுந்து பொலிஸார் மீதும் வைத்தியசாலை மீதும் கல் வீச்சுக்களை மேற்கொண்டு போராட்டத்தை திசை திருப்பி இருந்தனர்.

இவ்வாறான நிலையில் போராட்டம் இறுதியில்  சுமுகமான நிலையில் நிறைவடைந்த போதிலும் மக்கள் சார்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட மூவரை பல மாதங்கள் கழித்து மன்னார் பொலிஸார் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

சிந்துஜா மற்றும் வேணுஜா வின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இதுவரை முடிவுறுத் தப்படாத நிலையில் அவர்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அவர்கள் சார்பாக போராடிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title