Header Logo
SLIC
கிழக்கு
புதிய பிரகடனத்துடன் புதிதாக உள்நுழைந்த மாணவர்கள்

Jul 1, 2025 - 04:41 PM

புதிய பிரகடனத்துடன் புதிதாக உள்நுழைந்த மாணவர்கள்
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை  இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று (01) ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் பீடாதிபதி அஷ்- ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸின் முன்னிலையில் இடம்பெற்றது.

 

நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

இதன் போது கருத்து தெரிவித்த அவர்,

 

பல்கலைக்கழக கல்வியைத் தொடர இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்துக்கு புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதுடன் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் மிகுந்த உந்துசக்தியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் வழங்கும் இலவசக்கல்வியானது நாட்டில் சிறிய ஒரு குழுவினருக்குக் கிடைக்கும் சலுகையாகும் என்றும் இதனை பொறுப்புடன் பயன்படுத்தி நாடு எதிர்பார்க்கும் மாற்றத்தின் பங்காளிகளாக  மாணவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது அனைத்து சமூக மாணவ பிரதிநிதிகளையும் சமமாகக் கொண்டுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம் என்றும் இங்கு சகல மாணவர்களும் பாரபட்சமற்ற முறையில் சமமாகப் பார்க்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். தென்க்கியக்குப் பல்கலைக்கழகம் மிகுந்த ரம்மியமான இடத்தில் அமைந்துள்ளது என்றும் அத்துடன் மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் அத்தனையும் இங்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மாணவர்கள் ஆர்வத்தோடு கல்வி நடவடிக்கைகளிலும் விரிவுரைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும் என்றும் அதேவேளை பல்கலைக்கழக விதிகளையும் நடத்தை முறைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

வன்முறைகளில் இருந்தும் தேவையற்ற குழப்பங்களில் இருந்தும் ஒதுங்கி இருப்பது மாணவர்களில் எதிர்கால முன்னேற்றத்துக்கு உறுதுணையாக அமையும் என்றும் தெரிவித்தார்.

 

பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வியைத் தொடர ஆரம்பிப்பது முதல் பெற்றோர்கள் ஆற்றிய பிள்ளைகள் மீதான கண்காணிப்புகளை பல்கலைக்கழக கல்வி முடியும் வரை இரட்டிப்பாக்கி பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

பகிடிவதை மாணவர்களின் வாழ்வை சீரழித்துள்ளதாகவும் அரசு அதற்கு எதிராக இறுக்கமான சட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் இந்த விடயத்தில் மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வின் வரவேற்புரையை நிகழ்வின் இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.எஸ்.அஹமட் ரியாத் ரூலி நிகழ்த்தினார்.

நிகழ்வின்போது இஸ்லாமியக் கற்கைகள்  மற்றும் அரபுமொழி பீட தினைக்களகங்களின் தலைவர்களான பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். நஹ்பீஸ் மற்றும் கலாநிதி ஏ.எம். றாசீக் ஆகியோர் தங்களது திணைக்களங்களின் கற்கை பொறிமுறைகள் தொடர்பிலும் குறித்த பகுதிகளில் கற்பதனூடாக பெறக்கூடிய அனுகூலங்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறினர்.

 

இஸ்லாமியக் கற்கைகள்  மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்- ஷெய்க்  எம்.எச்.ஏ. முனாஸ் தனது உரையில்,

 

பீடம் கடந்துவந்த பாதைகள் தொடர்பிலும் மாணவர்களுக்கு உள்ள வரப்பிரசாதங்கள் சம்மந்தமாகவும் எடுத்துரைத்தார்.


இங்கு இளங்கலை மாணவர் வழிகாட்டி நூல் ஒன்றும் நிகநிலையூடாக் வெளியீடு செய்யப்பட்டது. அதேவேளை இரண்டாம் ஆண்டு மாணவர்களால் பகிடிவதைத் தடுப்பு அறிவிப்பு ஒன்றும் பிரகடனப்படுத்தப்பட்டது விஷேட அம்சமாகும்.

 

இவர்களது பிரகடனத்தில் 2022 மற்றும் 2023 கல்வியாண்டு மாணவர்களாகிய நாங்கள் 2023 மற்றும் 2024 மாணவர்களை உள்ளீர்க்கும் இந்த மகத்தான நாளில் பின்வரும் உடன்பாட்டை பிரகடனப்படுத்துகிறோம் என்பதை மகிழ்ச்சி அடைகின்றோம்.

 

இங்கு வருகை தந்திருக்கின்ற 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ்வித பகிடிவதைகளுக்கும் உட்படுத்தாமல் சகோதர வாஞ்சையுடன் இந்தப் பல்கலைக்கழகத்திற்குள்ளும் வெளிவிலும் அவர்களை நாங்கள் பார்ப்போம் என்று பிரகடனப்படுத்துகிறோம்.

 

மேலும், முதலாம் வருட மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ புண்படுத்தக்கூடிய எந்தவித நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபடுவதில்லை என்ற உடன்பாடையும் உங்கள் முன் இப்போதிருந் நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

 

இந்தப் பிரகடனத்தை நாங்கள் எவ்வித அழுத்தமும் இன்றி நாமாகவே எங்கள் தொகுதி மாணவர்கள் சார்பில் தெளிவித்துக் கொள்கிறோம். வரலாற்று முக்கியத்துடன் மிகக் இந்த கைங்கரியத்தை ஏனைய பீட மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்தார்.

 

குறித்த நிகழ்வின்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்டவிரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம், சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்கள் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபார், நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278