Header Logo

இந்தியா
மயிரிழையில் தப்பிய மற்றொரு ஏர் இந்தியா விமானம்

Jul 2, 2025 - 10:21 AM -

0

மயிரிழையில் தப்பிய மற்றொரு ஏர் இந்தியா விமானம்

கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதில் 242 பயணிகளில் 241 பேர் இறந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். விமானம் மோதி விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியிலும் பலர் உயிரிழந்தனர்.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 270 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த 2 நாடுகளுக்கு பிறகு மற்றொரு ஏர் இந்தியா விமானம் விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜூன் 14 அன்று டெல்லியில் இருந்து அவுஸ்திரிய தலைநகர் வியன்னாவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 777 விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, பாதகமான வானிலை காரணமாக விமானம் திடீரென தரையை நோக்கிச் சரிந்தது. அது 900 அடி உயரத்தில் இறங்கியதும், அவசர சமிக்ஞைகள் உடனடியாக ஒலித்தன. எச்சரிக்கையாக இருந்த விமானிகள் உடனடியாக விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, ஒரு பெரிய விபத்தைத் தவிர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இந்த விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளையும் இடைநீக்கம் செய்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title