Jul 3, 2025 - 04:03 PM -
0
கொழும்பில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (02) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்பு செயலாளர் கேர்ணல் அமீரை அன்புடன் வரவேற்று அவருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேலும் இதன்போது இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் கலந்து கொண்டார்.
பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் நீண்டகால நட்பு மற்றும் பகிரப்பட்ட ஆர்வத்தை இச்சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.