செய்திகள்
2027 ரக்பி உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தது இலங்கை

Jul 4, 2025 - 06:38 PM -

0

2027 ரக்பி உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தது இலங்கை

இன்று (04) கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship 2025) போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணியிடம் இலங்கை தேசிய ரக்பி அணி 21-29 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

 

இதனால், 2027 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரக்பி உலகக் கிண்ணத்திற்கு, ஆசியப் பிரிவில் இருந்து நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி தவறவிட்டது.

 

தொடர்ந்து மூன்றாவது தோல்வியால் இலங்கை அணி சாம்பியன்ஷிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது, தற்போது முதல் தரவரிசையில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05