Jul 8, 2025 - 02:31 PM -
0
இந்தியாவின் சூரத் பகுதியில் நேற்று இரவு (07) நகைக் கடை ஒன்றை கொள்ளையடிக்க வந்த கும்பல், கடை உரிமையாளரை சுட்டுக் கொலை செய்து அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ளனர்.
ஆயுதங்களுடன் கூடிய நான்கு பேர் அந்தக் கடைக்குள் நுழைந்து, உள்ளே இருந்தவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் தப்பியோட முயன்றபோது, கடை உரிமையாளர் அவர்களைத் தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது கொள்ளையர்கள் அவரை சுட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
உள்ளூர் மக்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, கொள்ளையர்கள் கடைக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தின் மீதும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து நான்கு சந்தேக நபர்களில் ஒருவரைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.
தப்பியோடிய மூன்று சந்தேக நபர்களைத் தேடி இந்திய பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.