செய்திகள்
1500CCக்கும் குறைவான வாகனங்களுக்காக வரிச்சலுகை கோரிக்கை

Jul 8, 2025 - 06:07 PM -

0

1500CCக்கும் குறைவான வாகனங்களுக்காக வரிச்சலுகை கோரிக்கை

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது 1500CCக்கும் குறைவான வலு கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சலுகைகளை வழங்குமாறு உள்நாட்டு இறைவரி அதிகாரிகள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உள்நாட்டு இறைவரி பணிக்குழாம் அதிகாரிகள் சங்க செயலாளர் ஜே.டி.சந்தன இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்தார். 

அந்த வலுவை விட அதிக வலு கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதால் அதிக அளவு அந்நிய செலாவணி வெளியேற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார். 

எனவே 1500CCக்கும் குறைவான வலு கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டால், மக்கள் மற்றும் வணிகங்கள் அத்தகைய வாகனங்களை இறக்குமதி செய்ய ஊக்குவிக்கப்படும் என்றும், இதன் மூலம் அதிக அளவு அந்நிய செலாவணி வெளியேறுவதைக் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும் உரையாற்றிய உள்நாட்டு இறைவரி பணிக்குழாம் அதிகாரிகள் சங்க செயலாளர் ஜே.டி.சந்தன, 

"நாட்டிற்குள் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். குறிப்பாக இந்த CC திறன் கொண்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 

இந்த வாகனங்களுக்கு அதிக அளவு அந்நியச் செலாவணி செலவாகும், 1500க்கும் குறைவான CC வலு கொண்ட வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், அவற்றுக்கு அதிக வரிச்சலுகைகள் வழங்கப்பட்டால், மக்களும் வணிகங்களும் அத்தகைய வாகனங்களை இறக்குமதி செய்வார்கள் என்பதால், இது அதிக அளவு அந்நியச் செலாவணி வெளியேறுவதைத் தடுக்கும் என்று ஒரு தொழிற்சங்கமாக, யோசனை முன்வைக்கிறோம். 

ஏனென்றால் இறக்குமதி செய்யப்பட்ட சில வாகனங்களின் மதிப்பைப் பார்க்கும்போது, ​​வெளியேறும் அந்நியச் செலாவணியின் அளவு மிகப் பெரியது என்பதை நாங்கள் அறிவோம். 

அத்தகைய ஒரு வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் அந்நியச் செலாவணியின் அளவுடன் ஒப்பிடும் போது 1500CCக்கும் குறைவான வலு கொண்ட 20-25 வாகனங்களை இறக்குமதி செய்யலாம்." என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05