செய்திகள்
சிங்கமலை குளத்தில் தவறி விழுந்து இளைஞன் மாயம்

Jul 9, 2025 - 08:26 AM -

0

சிங்கமலை குளத்தில் தவறி விழுந்து இளைஞன் மாயம்

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆறு நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த தமிழ்மாரன் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த இளைஞர் உள்ளிட 06 பேர் நேற்று (09) மாலை 05.00 மணியளவில் குறித்த ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர். 

இதன் போதே குறித்த இளைஞன் தவறி விழுந்துள்ளார். 

கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடும் பணியினை முன்னெடுத்த போதும், பின்னர் தேட முடியாத நிலையில், இன்று காலை தேடுதல் நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். 

பெற்றோர் வெளிநாட்டில் பணிபுரிவதுடன் ஹட்டன் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தக்கியிருந்து குறித்த இளைஞன் கல்வி கற்று வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05